மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 11 சட்ட மேலவை உறுப்பினர் பதவிகளுக்கு வெள்ளிக்கிழமை – ஜூலை 12 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மாலையில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சட்ட மேலவையின் 11 இடங்களுக்கான இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலுக்கு மொத்தம் 14 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மேலவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க மகாராஷ்டிர சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 288 இடங்களில் கட்சி வாரியாக, பாஜகவுக்கு 105 உறுப்பினர்களும், அஜித் பவார் தலைமையிலான என்சிபிக்கு 39 உறுப்பினர்களும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு 37 உறுப்பினர்களும் உள்ளனர்.
எதிர்க்கட்சியில் இருந்து காங்கிரசுக்கு 37 எம்எல்ஏக்கள், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு 15, சரத் பவார் தலைமையிலான என்சிபிக்கு 10 எம்எல்ஏக்கள் உள்ளனர்.