பாஜக 150 – 160 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ள நிலையில், ஷிண்டே அணி 70 -80 தொகுதிகளிலும், அஜீத் பவார் அணி 50 – 55 தொகுதிகளில் கொடுக்க முன்வந்துள்ளது. ஆனால், வலுவான முதல்வராக மீண்டும் அமர்வதற்கு 100 தொகுதிகள் வரை ஷிண்டே எதிர்பார்கிறார்.
இதனிடையே, பாஜக 99 வேட்பாளர்கள், ஷிண்டே அணி 64 வேட்பாளர்கள், அஜீத் பவார் 38 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. மூன்று கட்சிகளும் ஏற்கெனவே வெற்றி பெற்றுள்ள 210 தொகுதிகளில் எவ்வித பிரச்னையும் இல்லை. மீதமுள்ள தொகுதிகளில் 30 தொகுதிகள் வரை மூன்று கட்சிகளும் கேட்பதால் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
மும்பைக்கு இருநாள் பயணம் மேற்கொண்ட அமித் ஷா, தொகுதி பங்கீடு பிரச்னையை மாநில அளவிலேயே பேசி முடித்துக் கொள்ளும்படி கூட்டணி தலைவர்களுக்கு அறிவுறுத்தி சென்றார்.
ஆனால், பிரச்னைக்கு தீர்வு எட்டப்படாத நிலையில், வியாழக்கிழமை இரவு அமித் ஷாவை சந்திக்க அஜீத் பவாரும், ஃபட்னவீஸும் தில்லி புறப்பட்டுச் சென்றனர்.