மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் இன்று காலை கூடியது. இதில் தற்போதைய துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் புதிய முதல்வராக (சட்டப்பேரவை பாஜக குழு தலைவா்) தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் இன்று மாலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோருகிறார் தேவேந்திர ஃபட்னவீஸ். பிறகு, நாளை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில், முதல்வராக அவர் பதவியேற்க உள்ளார்.
மகாராஷ்டிர முதல்வா் பதவியேற்பு நிகழ்ச்சி தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் டிச. 5-ஆம் தேதி மாலை நடைபெறுவதும், அதில் பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவா்கள் பங்கேற்பதும் ஏற்கெனவே உறுதியாகிவிட்டிருக்கும் நிலையில், இன்றைய கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.