முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாற்றுத்திறனாளிகள் பற்றி மகாவிஷ்ணு கூறிய கருத்துகள் தவறானது. மாற்றுத்திறனாளிகளின் மனம் புண்படும் வகையில் பேசியது கடும் கண்டனத்திற்குரியது. மாற்றுத்திறனாளிகளை மனிதநேயத்துடன் பார்க்க வேண்டும். சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த மகாவிஷ்ணு திமுக அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
நாமக்கல் அரசுப் பள்ளி சுவரில் மனிதக் கழிவை சமூகவிரோதிகள் பூசியிருக்கிறார்கள். இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே வேங்கைவயல் சம்பவத்தில் இன்னும் அரசால் தீர்வு காண முடியவில்லை. திமுக ஆட்சியல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பயமில்லாமல் ஈடுபடுகிறார்கள்.