மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா: தமிழிசை உருக்கம்

Dinamani2f2025 04 092f9ogoqfg52ftamilisai Soundararajan.jpg
Spread the love

காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:15 மணியளவில் காலமானாா்.

வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் காலமானாா்.

மறைந்த குமரி அனந்தனின் உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது மகளும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான டாக்டா் தமிழிசை செளந்தரராஜனின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழிசை செளந்தரராஜன் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை… தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று…. பெருமையாக பேச வைத்த என் தந்தை குமரி அனந்தன் இன்று என் அம்மாவோடு இரண்டர கலந்துவிட்டார்…

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்!

குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து.. தன் முழு முயற்சியினால்… அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக… தமிழ் மீது.. தீராத பற்று கொண்டு… தமிழிசை என்ற பெயர் வைத்து… இசை இசை… என்று கூப்பிடும் என் அப்பாவின்… கணீர் குரல்… இன்று காற்றில்.. இசையோடு கலந்து விட்டது….

வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று… சீரான வாழ்க்கை வாழ்ந்தவர்… இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம்… சீராக வாழ்வதைக் கண்டு… பெருமைப்பட்டு.. வாழ்த்திவிட்டு.. எங்களை விட்டு மறைந்திருக்கிறார்… என்றும். .. அவர் பெயர் நிலைத்திருக்கும்.

தமிழக அரசியலில்.. நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்…. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா… நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ… அதை மனதில் கொண்டு… உங்கள் பெயரில்… நாங்கள் செய்வோம் என்று… உறுதியோடு… உங்களை வழி அனுப்புகிறோம்.

உங்கள் வழி உங்கள் வழியில்…… நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல… நாமும் மகிழ்ச்சியாக இருந்து.. மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும்.. என்று உங்கள் ஆசை ஆசையை.. எப்போதும் நிறைவேற்றுவோம்… போய் வாருங்கள் அப்பா.

தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்… நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *