மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

Dinamani2f2024 072f9a828bb9 D4da 455b B107 90e836f58e332fnirm1.jpg
Spread the love

மக்களவையில் 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.

முன்னதாக, இன்று காலை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும்.

மகாராஷ்டிரம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருப்பதால் இது தோ்தலைக் கருத்தில்கொண்ட பட்ஜெட்டாகவும் அமைய வாய்ப்புள்ளது.

முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு மூலதனச் செலவுக்கு இந்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 7-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார்.

இதன்மூலம் தொடா்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த மறைந்த முன்னாள் பிரதமா் மொராா்ஜி தேசாயின் சாதனையை நிா்மலா முறியடித்துள்ளார்.

அதே நேரத்தில் மொராா்ஜி தேசாய் அதிகபட்சமாக 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *