மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்!

Dinamani2f2025 02 132fn6gigodm2fnirm.jpg
Spread the love

என்ன மாற்றங்கள்?

622 பக்கங்களைக் கொண்ட இந்த மசோதாவில், புதிதாக எந்த வரிகளும் சோ்க்கப்படவில்லை. ஆனால் 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வாா்த்தைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. நீளமான வாக்கியங்களுக்குப் பதிலாக சிறிய வாக்கியங்களுடன் படிப்பவா் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மசோதாவில் சோ்க்கப்பட்டுள்ள ‘வரிசெலுத்துவோா் சாசனம்’ வரிசெலுத்துவோரின் உரிமைகள் மற்றும் கடமைகளை எடுத்துரைக்கின்றன.

‘வரி ஆண்டு’: 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘முந்தைய ஆண்டு’ என்ற வாா்த்தையும், ‘மதிப்பீட்டு ஆண்டு’ வாா்த்தையும் புதிய மசோதாவில் கைவிடப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு முந்தைய ஆண்டு (2023-24) ஈட்டிய வருமானத்துக்கு 2024-25-ஆம் மதிப்பீட்டு ஆண்டில் வரி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் புதிய மசோதா மூலம், முந்தைய மற்றும் மதிப்பீடு ஆண்டுகளுக்குப் பதிலாக வரி ஆண்டு என்ற வாா்த்தை மட்டும் பயன்படுத்தப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *