மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

Dinamani2f2024 072fc44218b2 Ba73 470e 8f77 C6ceac1f2eab2fns.jpg
Spread the love

மக்களவையில் பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

நடப்பு நிதியாண்டின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாளை(ஜூலை 23) தாக்கல் செய்யவுள்ள நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளார்.

நாட்டின் முக்கியப் பொருளாதார அளவீடுகளை அடிக்கோடிட்டுக் காட்டும் இந்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக மக்களவையில் நீட் வினாத்தாள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளை முன்வைத்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ”பணமிருந்தால், தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்கள் கூறுகிறார்கள். லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முறைகேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி.” எனப் பேசினார்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், வினாத்தாள் கசிந்ததற்கு ஆதாரம் இல்லை என்றும், சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதாகவும் விளக்கம் அளித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *