மக்களிடம் பயண உணர்வு வலுவாக உள்ளது: கிளியர்டிரிப்

Dinamani2f2024 072f253f708c A32a 42b0 83d8 D7f48edc141d2fcleartrip.jpg
Spread the love

மும்பை: நாட்டில் பருவமழை பெய்தாலும், உள்நாட்டில் விருப்பத்துடன் பயணம் மேற்கொள்ளும் உணர்வு மக்களிடம் வலுவாக உள்ளது என்று கிளியர்டிரிப் நிறுவணம் தெரிவித்துள்ளது.

இந்த பருவத்தின் மழைக்காலத்தில் பயண உணர்வு மக்களிடம் வலுவாக உள்ள வேளையில், சர்வதேச இடங்களை விட உள்நாட்டு இடங்கள் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதே வேளையில் கோவா, காஷ்மீர் மற்றும் கேரளா ஆகிய இடங்கள் மிகவும் பிரபலமான தேர்வுகளாக உள்ளது என்றார் கிளியர்டிரிப் துணைத் தலைவர் கெளரவ் பட்வாரி.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

தற்போது ஒடிசாவின் புவனேஸ்வர் மாவட்டம் மக்களிடம் பெறும் ஆர்வத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது பருவமழைக்கான முன்பதிவுகளில் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது ஜெகந்நாத் பூரி ரத யாத்திரை கொண்டாட்டங்களுக்கு காரணமாக இருக்கலாம்.

சர்வதேச அரங்கில் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய விசா இல்லாத நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக பாலி, இந்தியாவிலிருந்து நேரடி விமான சேவை அதிகரித்துள்ளதால் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

2019ஆம் ஆண்டு கரோனா தொற்றுக்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடும்போது இந்த இடங்களுக்கான முன்பதிவுகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளன. மலேசியா மற்றும் இந்தோனேசியா 4 மடங்கும், தாய்லாந்து 2 மடங்கும், இலங்கை 3 மடங்கு மக்கள் சென்று வருவது அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், இந்த பருவத்தில் கஜகஸ்தான் இந்திய பயணிகளுக்கு விருப்பமான இடமாக உருவெடுத்துள்ளது. 2024 மற்றும் 2019 உடன் ஒப்பிடும்போது இந்த மழைக்காலத்தில் முன்பதிவு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *