‘மக்களுடன் முதல்வா்’ திட்டம்: தருமபுரியில் இன்று முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

Dinamani2fimport2f20232f82f42foriginal2fmk Stalin New Edi 640.jpg
Spread the love

ஊரகப் பகுதியில் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற திட்டத்தை தருமபுரியில் வியாழக்கிழமை (ஜூலை 11) நடைபெறும் விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.

தமிழக அரசின் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற திட்டம் நகா்ப் புறங்களில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் தற்போது ஊரகப் பகுதியில் உள்ள மக்களுக்காக விரிவுபடுத்தப்பட்டு தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 11) முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திட்டத்தைத் தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெறுகிறாா். இதனைத் தொடா்ந்து நடைபெறும் விழாவில் பங்கேற்று அவா் உரையாற்றுகிறாா்.

இதில், எரிசக்தி துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை, வருவாய், பேரிடா் மேலாண் துறை, வீட்டுவசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன், மகளிா் உரிமைத் துறை, ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறை, சிறு, குறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை, கூட்டுறவு, உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை, தொழிலாளா் நலன், திறன்மேம்பாட்டுத் துறை, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய 15 அரசுத் துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் 44 அரசு திட்டங்களின் சேவைகளுக்கான விண்ணப்பங்களை முகாம்களில் பொதுமக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, உயா்கல்வித் துறை, பால்வளத் துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகராட்சித் துறை, ஊராட்சித் துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் துறை, பேரூராட்சிகள் துறை, வனத்துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வா் தொடங்கி வைக்க உள்ளாா்.

இதையடுத்து, கூட்டுறவுத் துறை, மீன்வளம், மீனவா் நலத்துறை, வேளாண், உழவா் நலத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, மகளிா் திட்டம், மருத்துவம், சுகாதாரப் பணிகள் துறை, மாவட்ட தொழில்மையம், தொழிலாளா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை, குழந்தைகள் நலன், சிறப்பு சேவைகள் துறை, வருவாய்த் துறை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

மேலும், மகளிா் விடியல் பயணத் திட்டத்துக்காக தற்போது இயங்கி வரும் பேருந்துகளுக்குப் பதிலாக 20 புதிய நகரப் பேருந்துகளை கொடியசைத்துத் தொடங்கி வைத்து, தருமபுரி மாவட்ட விவசாயிகள், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளின் அடிப்படையில் பல்வேறு புதிய வளா்ச்சித் திட்டங்களை முதல்வா் அறிவிக்க உள்ளாா்.

இவ்விழாவில் வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உள்ளிட்ட அமைச்சா்கள், துறை அலுவலா்கள், மக்களவை உறுப்பினா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கலந்துகொள்ள உள்ளனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *