தெருநாய்களை பாதுகாக்க கோரி “விலங்குகளுக்கான சொர்க்கம்’ என்ற அரசு சாரா அமைப்பு சார்பில், புதுப்பேட்டை, லாங்ஸ் கார்டன் சாலையில் நேற்று அமைதி பேரணி நடந்தது. இந்த பேரணியில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்துகொண்டார்.
தெரு நாய்களுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியும், தெருநாய்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியும் பேரணி நடத்தப்பட்டது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகை நிவேதா பெத்துராஜ், “ஒரு ஊரில் நாய் கடிக்கிறது என்றால் அதை எல்லோருக்கும் பரப்பி, ஒரு பயத்தை உருவாக்கும் செயல். நாய் கடிப்பதால் ரேபிஸ் நோய் வருகிறது, எனவே, நான் நாய்கடியை சரியானது என நான் சொல்லவில்லை.
ஆனால், இதை வைத்து பயத்தைப் பரப்புவதற்குப் பதிலாக என்ன தீர்வு கொடுக்கலாம் என்பதுதான் முக்கியம். சிறுவயதிலிருந்தே இது தொடர்பான புரிதலை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். ஒருவர் தவறாக நடந்துகொள்கிறார் என்பதால் எல்லோரையும் நான் அப்படியே பார்ப்பதில்லையே. அதேதானே நாய்களுக்கும் நாம் பொருத்திப்பார்க்க வேண்டும்.