“மக்கள் வரிப்பணம் எங்கே செல்கிறது?” – அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பி.தங்கமணி கேள்வி | admk former minister Thangamani slam dmk government at madurai

1339947.jpg
Spread the love

மதுரை: “திமுக ஆட்சியில் குப்பை வரி, சொத்து வரி, மின்கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். ஆனால், மக்களுக்கான அடிப்படை வசதிகளை கூட அவர்களால் நிறைவேற்றிக் கொடுக்க முடியவில்லை. அப்படியென்றால் மக்கள் செலுத்தும் வரிப்பணம் எங்கே செல்கிறது,” என்று அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரை மாநகராட்சியில் பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாளசாக்கடை திட்டத்தை நிறைவேற்றாததை கண்டித்தும், மோசமான சாலைகள், வண்டில் மண் என்ற போர்வையில் கனிம கொள்ளையை கண்டித்தும் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருப்பரங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தலைமை வகித்து பேசியது: “அதிமுக சட்டமன்ற தொகுதி என்பதால் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய பழுதடைந்த சாலையை சீரமைக்கவில்லை.

பாதுகாப்பான குடிநீர் வழங்க அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மூன்றை ஆண்டு காலமாக முடக்கி வைத்துள்ளனர். பாதாளசாக்கடை அமைக்கவில்லை. 10 ஆண்டு சொத்து வரி, குடிநீர் கட்டணம் உயரவில்லை. ஆனால், திமுக அரசு குப்பை வரி, சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். அதிமுக ஆட்சியில் வரியை உயர்த்தாமலே மக்குளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுத்தது. மக்களுக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் வரியை உயர்த்திவிட்டு அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்க மறுக்கிறது. அப்படியென்றால் மக்கள் வரிப்பணம் எங்கே செல்கிறது?

அதிமுக இல்லாவிட்டால் பெண்களுக்கு தற்போது ரூ.1,000 உரிமைத்தொகை கூட வந்திருக்காது. அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 உரிமை தொகையை வழங்குவதாக வாக்குறுதி அறிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்ததும் திமுக அரசு அதனை நிறைவேற்றவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி, தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியதால் தகுதியுள்ளவர்களுக்கு என்று மட்டும் கூறி பாராபட்டசமாக 1 கோடியே 13 லட்சம் பேருக்கு மட்டும் வழங்குகிறார்கள். தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்திலே அவர்கள் அறிவித்து இருந்தால் பொதுமக்களும் தகுதியானவர்களுக்கே வாக்களித்து இருப்பார்கள்.

வாக்குறுதிகள் என்பது மக்கள் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை உயர்த்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா சொல்வார். அந்த அடிப்டையில் அவர், பெண்கள், மாணவர்கள், முதியவர்கள், இளைஞர்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்ட வந்தார். 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை நடக்கவில்லை. அதே காவல் துறைதான் தற்போதும் உள்ளது. ஆனால், அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளதால் போதைப்பொருள், கள்ளச்சாராயம் விற்பனை தாராளமாக நடக்கிறது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு குழந்தைகளை பாதுகாப்பாக அனுப்பி வைக்க முடியவில்லை. அதிமுக ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள இயக்கும். அதனால், திருப்பரங்குன்றத்தில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டம், அதிமுகவிற்கும் திருப்புமுனையை ஏற்படுத்தும்” என்று அவர் பேசினார்.

அதிமுக தகவல் தொழில்நுட்ப செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்தியன் பேசுகையில், “தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக போராட்டங்களால்தான் மக்களுக்கான திட்டங்கள், வசதிகள் நிறைவேற்றப்படுகிறது. அதுபோல், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு கண்டிப்பாக திமுக ஆட்சி நிதி ஒதுக்கி, அதிமுக சட்டமன்ற தொகுதிகளின் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும்.

சாலைகள் பழுதடைந்தால் தமிழக அரசு வழங்கிய ‘நம்ம சாலை’ அப்ளிகேசனில் மக்கள் புகார் செய்தால் 24 முதல் 72 மணி நேரத்தில் சரி செய்யப்படும் என துணை முதல்வர் உதயநிதி கூறினார். ஆனால், அதிமுக ஐடி விங் புகார் செய்த சாலைகள் இதுவரை சரி செய்யப்படவில்லை. பெண்டிங் என்ற நிலைதான் அந்த அப்ளிகேசனில் உள்ளது. இதுதான் வெற்று விளம்பர ஆட்சி என்று திமுகவை நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டுகிறோம். ஒரு புறம் முதல்வரும், மற்றொரு புறம் துணை முதல்வரும் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் கவனத்திற்கு எதுவும் செல்லவில்லை. வரிக்கு மேல் வரி போட்டு மக்கள் நசுக்கப்படுகின்றனர்,” என்றார்.

மதுரை கிழக்கு அதிமுக வசமாகும்: அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசுகையில், “திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், மதுரைக்கு டைடல் பார்க், மெட்ரோ ரயில் போன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆட்சி முடியும் தருவாயில் தற்போது வரை அவை நிறைவேற்றப்படவில்லை. ஜல்லிக்கட்டு அரங்கம், கலைஞர் நூலகத்தை தவிர திமுக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மணல் கொள்ளை, கனிம வள கொள்ளை தாரளமாக நடக்கிறது.

கருணாநிதிக்கு பின் ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பின்னால் உதயநிதி, உதயநிதிக்கு பின் இன்பநிதி என்ற குடும்ப இயக்கம் அதிமுக இல்லை. அதிமுகவில், சாமானியர் கூட ஆட்சி, அதிகாரத்திற்கு வரலாம் என்பதற்கு கிளைச்செயலாளராக இருந்து முதலமைச்சராக உயர்ந்த கே.பழனிசாமி உதாரணம். மதுரை கிழக்கு மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மேலூார் தொகுதிகளை கைப்பற்றியுள்ளோம். வரும் தேர்தலில் அமைச்சர் பி.மூர்த்தி உள்ள கிழக்கு தொகுதியையும் அதிமுக வசமாகும்,” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *