‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்’ – வீடு வீடாக ஸ்டிக்கர் ஒட்டி தவெகவினர் பிரச்சாரம் | “Peoples CM Candidate Vijay”: TVK Members Campaign Put Stickers Door to Door

Spread the love

சென்னை: “மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்” என தமிழகம் முழுவதும் வீடு வீடாக ஸ்டிக்கர் ஒட்டி தமிழக வெற்றிக் கழகத்தினர் பிரச்சாரம் செய்து, பொதுமக்களின் கருத்தை பெற்று கட்சி தலைமைக்கு நிர்வாகிகள் அனுப்பி வருகின்றனர்.

தமிழகத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் 9 மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சி களப் பணியை தீவிரப்படுத்தியுள்ளார். தற்போது வரை 80 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தவெக இணைந்துள்ள நிலையில், விரைவில் ஒரு கோடி உறுப்பினர் எண்ணிக்கையை எட்ட இருக்கிறது. மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக பிரத்யேக செயலியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தவெக தனித்து போட்டியா ? கூட்டணியா ? என முடிவாகாத நிலையில், செயற்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்’ என்ற பிரசாரத்தை மக்களிடையே பிரபலமடைய செய்ய செல்ல வேண்டும் என நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நிர்வாகிகள், வீடுவீடாக சென்று, ‘2026 மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்’ என்ற வாசகத்துடன், அதில் விஜய் புகைப்படத்துடன் கூடிய ஸ்டிக்கரை பொதுமக்களின் வீடுகளில் ஒட்டி வருகின்றனர். அப்போது, அவர்களிடம், கடந்த ஆட்சி குறித்தும், தற்போது நடைபெற்று வரும் ஆட்சி குறித்தும், மக்களுக்கான தேவை என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கேட்டு பதிவு செய்கின்றனர்.

அவ்வாறு பதிவு செய்ததை கட்சி தலைமைக்கு அனுப்பி வருகின்றனர். இதேபோல், சமூக வலைதளங்களிலும், ‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்’ என்ற பிரச்சாரத்தையும் தவெக தீவிரப்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *