தொடர்ந்து குடியிருப்பு பகுதியிலும் சாலை ஓரங்களிலும் உணவு தேடி வந்த இந்த யானையை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுச் செல்ல வனத்துறையினர் முடிவு செய்தனர். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு பிரத்யேக மரக்கூண்டிலும் ரிவால்டோ யானையை அடைத்தனர். இந்த விவகாரத்தில் தலையிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அந்த யானைக்கு சிகிச்சை அளித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என 2021 – ம் ஆண்டு உத்தரவிட்டது. 8 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவினர் ரிவால்டோ யானை குறித்து ஆய்வு மேற்கொண்டு மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

ரேடியோ காலர் பொருத்தப்பட்ட அந்த யானையை 24 மணி நேரமும் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் வனத்துறையினரின் கண்காணிப்பில் இருந்து மறைந்த ரிவால்டோ யானை, கடந்த சில நாள்களுக்கு முன்பு மீண்டும் தென்பட்டது. உடலின் பல இடங்களிலும் கடுமையான காயங்களுடன் காணப்பட்ட அந்த யானைக்கு வனத்துறையினர் கடந்த மூன்று நாள்களாக சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.