மச்சங்களின் நிறங்களும் அதன் பலன்கள் பற்றியும் மச்ச சாஸ்திரம் குறிப்பிடப்பட்டுள்ளது பற்றி இங்கு பார்ப்போம்.
மச்சம் எந்த நிறத்தில் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.. மச்சம் இருக்கும் இடமும் பலன்களும் இதோ!
மச்சங்களின் நிறங்களும் அதன் பலன்கள் பற்றியும் மச்ச சாஸ்திரம் குறிப்பிடப்பட்டுள்ளது பற்றி இங்கு பார்ப்போம்….
மச்சம் அடர் கருப்பு நிறத்தில் இருந்தால் அவர்களது வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கருப்பு நிறம் மச்சம் கொண்டவர்கள் பிறக்கும்போதே நிம்மதியான சூழ்நிலையில் பிறந்திருப்பார்களாம். கறுப்பு நிறம் ஆழ்ந்தில்லாமல் சற்று லேசாக இருந்தால், சிறிது அமைதியற்ற நிலையில் வாழ்க்கை அமையும், வருமானத்திலும் சற்று குறைபாடு இருக்குமாம்.
சாம்பல் நிறத்தில் மச்சம் அமைந்திருந்தால், ஏதாவது ஒரு கலையில் நல்ல திறமை மிக்கவராக திகழ்வார்கள். வருமானத்தில் பெரிய அளவில் பலன் இல்லாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் நிரந்தரமான வருமானத்திற்கு குறைவு இருக்காது.
பழுப்பு நிற மச்சமாக இருந்தால், இவர்களின் வாழ்க்கை இரும்பு, மரம் போன்ற பொருட்களோடு ஒட்டியதாக இருக்கும் என்று மச்ச சாஸ்திரங்கள் கூறுகின்றன. இளஞ்சிவப்பு நிறத்தில் மச்சம் அமைந்திருந்தால், மகான்களாக, கல்வியாளர், விஞ்ஞானியாகப் புகழ்பெறுவார்கள்.
வெண்மை நிற மச்சம் இருந்தால், அவர்கள் பலசாலிகளாகவும், துணிச்சல் மிக்கவராகவும், வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளும் திறமையாளராக இருப்பார்கள்.
சற்று நீல நிறமான மச்சத்தைப் பெற்றிருப்போர் பழைமை விரும்பிகளாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். வணிகத்துறையில் ஆர்வமாக இருப்பார்கள்.
குங்கும நிறத்தில் மச்சம் அமைந்திருந்தால், இவர்கள் உல்லாசப் பிரியர்களாக திகழ்வார்கள். மஞ்சள் நிறமாக அமைந்திருக்குமானால் மிகவும் கலகலப்பான இயல்பான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லோரிடத்திலும் நட்புடன் பழகும் குணம் படைத்தவர்கள்.
எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்
நெற்றி – விசேஷம்
உதடுகள் – கல்வியில் உயர்ந்த நிலை
இடது காது – வாழ்க்கை விரும்பியவாறு அமையும்
நாக்கு – குழந்தை உள்ளம் படைத்தவர்கள்
முதுகின் வலதுபுறம் – பெரிய லட்சியவாதி
முதுகின் இடதுபுறம் – முயற்சிகளில் தோல்வி
மார்பு – கலையில் சிறந்து விளங்குவார்கள்.