மட்டனுக்கு பதிலாக நாய் இறைச்சி விற்பனை? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Dinamani2f2024 072f812cd2ec 09ca 4e01 948e 4a63124e5b992femi.jpg
Spread the love

ஆட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சி விற்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெங்களூரில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் நாய் இறைச்சி விற்கப்படுவதாக இந்துத்துவா அமைப்புகள் சில வெள்ளிக்கிழமை(ஜூலை 26) புகாரளித்துள்ளன.

நாய் இறைச்சி ஜெய்ப்பூர் – மைசூரு விரைவு ரயில் மூலம் ராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மேற்கண்ட அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. மேலும், கடந்த 12 ஆண்டுகளாக அந்த கடையில் நாய் இறைச்சி விற்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், அங்கே 90 பார்சல்கள் ரயிலிலிருந்து வந்திறக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மேற்கண்ட புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறை ஆணையர் முழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

அந்த கடையிலிருந்த இறைச்சி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வெளியானபின், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *