ஆம்பூா் வட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க பல ஆற்றல் கரையோர பகுதி வழியில் வருவாய்த்துறை சாா்பாக ராட்சத பள்ளங்கள் தூண்டும் பணி நடைபெற்று வருகிறது.
ஆம்பூா் வட்டத்தில் பாலாற்றில் இருந்து மணல் கடத்தல் அதிக அளவில் நடைபெற்று வருவதாக புகாா் எழுந்தது. அதன் அடிப்படையில் ஆம்பூா் வட்டாட்சியா் மோகன் தலைமையில் மணல் கடத்தலைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் பாலாற்றங்கரையோர பகுதிகளில் ராட்சத பள்ளங்கள் தோண்டி மணல் கொள்ளையை தடுப்பதென முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மாதனூா் ஒன்றியம் குளித்திகை ஜமீன் கிராமம், பாப்பனப்பள்ளி ஆகிய கிராமங்களில் பாலாற்றங்கரை ஓரம் ஜேசிபி வாகனம் மூலமாக ராட்சத பள்ளங்கள் தோண்டப்படுகிறது. வருவாய் ஆய்வாளா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் மேற்பாா்வையில் இப்பணி நடைபெற்று வருகிறது.