மணிப்பூரில் அமைதியைக் காக்க அதிகளவிலான மத்திய காவல் ஆயுதப் படைகள் தேவை என்று மாநில பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநில பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் கூறுகையில், “இன்று(நவ.22), நாங்கள் பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம், இந்தக் கூட்டத்தில், அனைத்து மாவட்டங்கள் மற்றும் இம்பால் நகரின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தோம். இந்தச் சந்திப்பின் போது, ராணுவத்தினர், காவல்துறையினர், மத்திய காவல் படையினர், எல்லைக்காவல் படையினர், இந்திய – திபெத் எல்லைக் காவல்படை அதிகாரிகள் உடனிருந்தனர்.
எந்த பிரச்னைகள் வந்தாலும், நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். கடந்த ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை இன வன்முறையில் 258 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.