அதன்படி, காங்போக்பி மாவட்டத்தில் உள்ள சைகுல் காவல் நிலையத்தில், கைத்துப்பாக்கி, அதிநவீன துப்பாக்கி, கையெறி குண்டு, அதன் தோட்டாக்கள் மற்றும் இரண்டு வயர்லெஸ் ஃபோன்கள் மற்றும் பிற பொருள்களை போராட்டக்காரர்கள் ஒப்படைத்தனர்.
மேலும், பிஷ்ணுப்பூர் மாவட்டத்துக்குள்பட்ட பௌகாச்சோ இகாய் காவல் நிலையத்திலும் எஸ்பிபிஎல் துப்பாக்கி உள்பட சட்டவிரோத ஆயுதங்களைப் போராட்டக்காரர்கள் ஒப்படைத்தனர்.
இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் போராட்டக்காரர்கள் சரணடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மொத்தமாக இதுவரை 109 ஆயுதங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரில் முதல்வர் என். பைரன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, அங்கு பிப்.13 முதல் அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது. 2027 வரை பதவிக்காலம் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவை இடை நிறுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!