மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர்-தீவிரவாதிகள் இடையே மீண்டும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் சில பகுதிகளில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
எனினும் சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
வியாழன் இரவு சாந்திகோங்பால், யைங்காங்போக்பி உயோக் சிங் மற்றும் தம்னாபோக்பி உயோக் சிங் உள்ளிட்ட கிராமங்களில் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்கள் சுடத் தொடங்கினர்.
வயநாடு நிலச்சரிவு: பேரிடர் நிவாரண நிதியில் ரூ.153 கோடி பிடித்தம் செய்த மத்திய அரசு!
அவர்களை விரட்டுவதற்காக பாதுகாப்புப் படையினரும் வானத்தை நோக்கிச் சுட்டனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.
இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதக் குழுக்களும் தாக்குதலில் ஈடுபடுவதால் உயிா்ச் சேதம் தொடா்கதையாக உள்ளது.