மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காணக் கால அவகாசம் எடுக்கலாம் என்று அந்த மாநில முதல்வர் என்.பைரன் சிங் தெரிவித்துள்ளார்.
நூபி லானின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய அவர்,
மணிப்பூரில் நிலவிவரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறன. இருப்பினும், நிலைமை சீராகவும், தீர்வைக் கொண்டுவருவதற்கு காலஅவகாசம் எடுக்கும் என்று கூறினார்.
மேலும், ஆறு காவல் நிலையப் பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து மாநில அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பைத் தர வேண்டும்.