மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்சேனா கிராமத்தில் இன்று காலை தேர்தல் பணிமுடிந்த சி.ஆர்.பி.எப்.வீரர்கள் தங்கி இருந்தனர். அப்போது அங்கு வந்த கூகி இனக்குழுவினர் திடீரென சி.ஆர்.பி.எப்.வீரர்களை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதைத்தொடர்ந்து சி.ஆர்.பி.எப்.வீரர்களும் திருப்பி சுட்டனர். உடனே கூகி இனக்குழுவினர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப்.வீரர்கள் 2 பேர் பலியானார்கள் மேலும் சிலர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் கூடுதலாக பாதுகாப்பு வீரர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை வேட்டையாட தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாநிலத்தில் தேர்தல் பணி முடிந்து சி.ஆர்.பி.எப்.வீரர்கள் தங்கிஇருந்த இடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்து இருப்பது தெரியவந்தது. மணிப்பூரில்
பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடி அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து கூகி உள்ளிட்ட பழங்குடி அமைப்புகள் தொர்ந்து எதிர்ப்பு தெரிவித்து மோதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.