மணிப்பூரில் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில், ஆளுநர் ஆச்சார்யாவை முதல்வர் பிரேன் சிங் சனிக்கிழமை மாலை சந்தித்தார்.
மணிப்பூரில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் மீண்டும் அரங்கேறி வருகின்றன. ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று நடந்த வன்முறையில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில், நான்கு குக்கி சமூகத்தைச் சேர்ந்தவரும், மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து குக்கி, மெய்தி இனக் குழுக்கள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் வன்முறை காரணமாக 7 பேர் கொல்லப்பட்டனர். 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் மணிப்பூரில் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில், ஆளுநர் ஆச்சார்யாவை முதல்வர் பிரேன் சிங் சனிக்கிழமை மாலை சந்தித்தார்.
முன்னதாக மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் அவசரக் கூட்டம் மாநிலத் தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்றது. 25 எம்எல்ஏக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், ஆயுதமேந்திய கும்பல்களின் தொடர் தாக்குதல்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக அந்த வட்டாரம் தெரிவித்தது.
இந்த கூட்டத்திற்குப் பிறகு ஆளுநர் ஆச்சார்யாவை சந்திக்க முதல்வர் பிரேன் சிங் விரைந்தார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.