மணிப்பூர்: 5 ஏக்கர் போதைச் செடிகள் அழிப்பு!

Dinamani2f2025 01 142fp01abpe42fganja.jpg
Spread the love

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சட்டவிரோதமாக 5 ஏக்கர் அளவில் வளர்க்கப்பட்ட போதைச் செடிகள் பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தின் சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் ஜி மோங்லியன் கிராமத்தின் மலைத் தொடர்களில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த 5 ஏக்கர் அளவிலான போதைச் செடிகளை வனத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து நேற்று (பிப்.9) அழித்துள்ளனர்.

இதையும் படிக்க: மகா கும்பமேளாவில் 41 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

இதுகுறித்து, மணிப்பூர் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, சுமார் 25 கிலோ அளவிலான ஓப்பியமை உற்பத்தி செய்யக்கூடிய 5 ஏக்கர் அளவிலான போதைச் செடிகளை பாதுகாப்புப் படையினர் இணைந்து அழித்துள்ளதாவும், ஆதாரமாக 10 பாப்பி காய்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *