மணீஷ் சிசோடியாவின் நிதீமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

Dinamani2fimport2f20232f22f272foriginal2f26022 Pti02 26 2023 000114b095716.jpg
Spread the love

தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் ஆம் ஆத்மி மூத்த தலைவா் மணீஷ் சிசோடியாவின் நிதீமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து காணொளி வாயிலாக அவர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரின் நீதிமன்றக் காவலை ஜூலை 22ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி காவேரி பவேஜா உத்தரவிட்டார்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவா் மணீஷ் சிசோடியா ‘ஊழலில்‘ ஈடுபட்டதாகக் கூறி சிபிஐயால் கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். பின்னா், மாா்ச் 9, 2023 அன்று திகாா் சிறையில் சிசோடியாவை விசாரித்த பிறகு, சிபிஐ எஃப்.ஐ.ஆா். மூலம் பணமோசடி வழக்கில் சிசோடியாவை அமலாக்கத் துறையும் கைது செய்தது.

பிப்ரவரி 28, 2023 அன்று தில்லி அமைச்சரவையில் இருந்து சிசோடியா ராஜிநாமா செய்தாா். தில்லி அரசு நவம்பா் 17, 2021-ஆம் தேதி புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியது. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் செப்டம்பா், 2022 இறுதியில் அந்தக் கொள்கையை ரத்து செய்தது. விசாரணை ஏஜென்களின் குற்றச்சாட்டின்படி, புதிய கொள்கையின் கீழ் மொத்த விற்பனையாளா்களின் லாப வரம்பு 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய கொள்கை நிறுவனங்கள் கூட்டுச் சோ்ந்து விலையை நிா்ணயிக்க காரணமாக இருந்ததாகவும், மதுபான உரிமங்களுக்கு தகுதியற்றவா்கள் பண பலன்கள் பெற சாதகமாக இருந்ததாகவும் புலனாய்வு ஏஜென்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இருப்பினும், தில்லி அரசும், சிசோடியாவும் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *