அதன் தொடர்ச்சியாக தென்னந்திய நடிகர் சங்கத் தலைவரும், நடிகருமான நாசர் சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “அன்பும், அரணும், அனுபவமும், அறிவும், சொல்லும் செயலும், கனிவும் கற்பித்தலுமாய் திகழும் எங்கள் அண்ணன் வழிகாட்டி பாசமிகு திரு சிவகுமார் அவர்கள் இன்று மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றமைக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமே வாநிறை வாழ்த்துகளை தெரிவிக்கிறது.
இப்பெருமையை சூட்டியதற்கு தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலை கழகத்திற்கும், தன் பொற்கரங்களால் வழங்கிய தமிழ்நாடு அரசை சீராக நடத்திடும் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தங்கள் பன்னூறு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.