மதிமுக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

dinamani2F2025 09 152Frk5arxb62Fvaiko MDMK conference ed
Spread the love

திருச்சியில் நடைபெற்ற மதிமுக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மதிமுக சார்பில் இன்று (செப். 15) மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளரும் எம்.பி.யுமான துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதில், 12 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

கீழடி ஆய்வு முடிவுகளை உடனடியாக வெயிடப்பட்டு அங்கீகாரம் வழங்க வேண்டும்.

ஜிஎஸ்டி வரி மாற்றி அமைத்ததால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் வரி இழப்பை மத்திய அரசு ஈடு கட்ட வேண்டும்.

தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டு தண்டணைக்கு உள்ளாக்கப்படுவதும், லட்சகணக்கான ரூபாய்களை அபராதத்திற்கும் உள்ளாக்கப்படுவதையும் தடுக்க வேண்டும்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், சமஸ் கிருத மொழிதான் எல்லா மொழிகளுக்கும் தாய் என்ற கூறி இருப்பதும், சமஸ்கிருத மொழியை தொடர்பு மொழியாக்க வேண்டும் என்று கூறியிருப்பதற்கும் கண்டனம்.

மரபணு மாற்ற நெல் சாகுபடிக்கு மத்திய அரசு அனுமதியை ரத்து செய்யக்கோரி வேளாண் மக்கள் போராட்டக்களத்திற்கு தயாராக வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | சென்னையில் விஜய் பிரசாரம்! காவல்துறை அனுமதி கோரி மனு!

12 resolutions passed at MDMK conference!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *