மதிமுக 31-ம் ஆண்டு விழா: தொண்டர்களுக்கு வைகோ அறிவுறுத்தல் | Vaiko instructions to conduct flag hoisting ceremonies in every district for the 31st year of MDMK

1278349.jpg
Spread the love

சென்னை: மதிமுகவின் 31-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மக்களவைத் தேர்தல் வெற்றி விழாவைக் கட்சிக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதிமுகவின் 31-ம் ஆண்டு தொடக்க விழாவையும், மக்களவைத் தேர்தல் வெற்றியையும் கொண்டாடும் வகையில் கட்சிக் கொடியேற்று விழா நிகழ்ச்சிகளை ஜூலை 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலான இரண்டு வார காலம் அனைத்து மாவட்டங்களிலும், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் கிளை அளவில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

முதல்கட்டமாக கோவையில் அவைத் தலைவர் ஆடிட்டர் அ.அர்ஜூனராஜ், தருமபுரி, மதுரையில் பொருளாளர் மு.செந்திலதிபன், சென்னையில் முதன்மைச் செயலாளர் துரை வைகோ, செங்கல்பட்டு, வேலூரில் துணை பொதுச்செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா உள்ளிட்டோர் கொடியேற்று விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *