மதுபோதை: பழக்கடையில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த கும்பல் – சிவகாசியில் கொடூரம்

Spread the love

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல்லிருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலை திருவள்ளுவர் காலனியில் வசிக்கும் ராமர் என்பவர் கக்கன் காலனியில் பழக்கடையுடன் குளிர்பானக் கடையும் நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல், மது போதையில் வியாபாரி ராமரிடம் மாமூல் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

மதுபோதை
மதுபோதை

ராமர் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறி பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் ராமரை சரமாரியாக தாக்கி, அவரிடமிருந்து 2,000 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்குக் காவல் நிலைய போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, ராமரின் கடையில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர்களை வலைவீசித் தேடியுள்ளனர்.

வியாபாரியின் பணம் பறிப்பு

அதனைத் தொடர்ந்து சந்தோஷ், சாமுவேல்ராஜன் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாயுள்ள மூவரை தேடி வருகின்றனர்.

மது போதையில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு அவர் மீது வாலிபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகர்ப் பகுதிகளின் மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *