மதுரையில் சாலையில் கிடந்த ரூ.17.50 லட்சம் போலீஸில் ஒப்படைப்பு: வீட்டுவேலை செய்யும் பெண்ணுக்கு பாராட்டு | 17.50 lakh lying on the road in madurai woman handover to the police

1381182
Spread the love

மதுரை: மதுரை​யில் சாக்கு மூட்​டை​யுடன் சாலை​யில் கிடந்த ரூ.17.50 லட்​சத்​தை, வீட்​டு​வேலை செய்​யும் பெண் ஒரு​வர் மீட்​டு, போலீஸில் ஒப்​படைத்​தார். அவரை போலீ​ஸார், பொது​மக்​கள் பாராட்​டினர். மதுரை சிம்​மக்​கல்​லைச் சேர்ந்​தவர் செல்​வ​மாலினி(46), வீட்​டு​வேலை பார்க்​கும் இவர் கோயில்​களில் உழவாரப் பணி​யிலும் ஈடு​பட்டு வரு​கிறார். நேற்று முன்​தினம் இரவு மதுரை மாட்​டுத்​தாவணி​யிலுள்ள ஜவுளிக்​கடைக்கு சென்​றிருந்ததனது சகோ​தரி மகன், மகளை அழைக்க சிம்​மக்​கல் பேருந்து நிறுத்​தத்​துக்​குச் சென்​றார்.

அவர்​களை அழைத்​துக்​கொண்டு புறப்​பட்​ட​போது வக்​கீல் புதுத்​தெரு சந்​திப்​பில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்​ததைக் கண்​டார். இதனை ஓரமாக தள்​ளி​விட முயன்​ற​போது, மூட்​டை​யில் ரூ.500 பணக்​கட்டு இருப்​பது தெரிந்​தது. பின்​னர் அந்​தப் பண மூட்​டையை காவல் நிலை​யத்​தில் ஒப்​படைக்​கச் செல்ல முயன்​ற​போது, ரோந்து பணி​யில் இருந்த போலீ​ஸார் எதிரே வந்​தனர். இதனால் அவர்களிடம் ஒப்​படைத்​து​விட்​டுச் சென்​று​விட்​டார்.

விளக்​குத்​தூண் காவல் நிலை​யத்​துக்கு பணமூட்​டையைக் கொண்​டு​வந்து போலீ​ஸார் பிரித்​துப் பார்த்​த​போது அதில் 500 ரூபாய் நோட்​டு​கள் கொண்ட ரூ.17.49 லட்​சம் இருந்​தது. அதைத் தொடர்ந்​து, வக்​கீல் புதுத் தெரு​விலுள்ள சிசிடிவி கேமரா பதிவு​களைச் சேகரித்​தும், செல்​வ​மாலினியை அழைத்​தும் போலீ​ஸார் விசா​ரித்​தனர்.

இதற்​கிடையே, அந்​தப் பணத்​துக்கு உரிமை கொண்​டாடி ஒரு​வர் காவல் நிலை​யத்​துக்கு வந்​தார். அவர் கேரளாவைச் சேர்ந்த பேட்டரி வியா​பாரி என்​றும், வாக​னத்​தில் பணத்​தைக் கொண்டு சென்​ற​போது, தவற​விட்​ட​தாக​வும் கூறி​னார். அதன் உண்​மைத் தன்மை குறித்து போலீ​ஸார் அவரிடம் விசா​ரித்து வரு​கின்​றனர்.

உரிய ஆவணங்​களை ஒப்​படைக்​கும் பட்​சத்​தில் அவரிடம் பணம் ஒப்​படைக்​கப்​படும் என, காவல் ஆய்​வாளர் சங்​கர் கண்​ணன் தெரி​வித்​தார். சாலை​யில் கிடந்த பணத்தை மீட்டு போலீ​ஸில் ஒப்​படைத்த செல்​வ​மாலினியை போலீ​ஸாரும், பொது​மக்​களும் பாராட்​டினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *