மதுரையில் மேம்பால இரும்பு சாரம் சரிந்து விபத்து: 4 பேர் காயம்

Dinamani2f2024 11 282fwdxuchxt2fmdu1.jpg
Spread the love

மதுரை: மதுரை கோரிபாளையத்தில் மேம்பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த சாரம் புதன்கிழமை இரவு சரிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரை கோரிபாளையத்தில் தல்லாகுளம் சந்திப்பு முதல் செல்லூர் வரை மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க | தமிழகத்தை நோக்கி நகா்கிறது புயல் சின்னம்

இந்த நிலையில், மேம்பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு சாரம் பாரம் தாங்காமல் புதன்கிழமை இரவு திடீரென சரிந்து விழுந்தது.

இதில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்த 4 பேரும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து செல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *