மதுரையில் Hockey Junior WC: இங்கிலாந்து vs நெதர்லாந்து – `விறு விறு போட்டி' இறுதியில் வென்றது யார்?

Spread the love

மதுரை, தமிழ்நாடு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் 14வது சர்வதேச ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது நாள் முதல் போட்டி மிதமான மழையுடன் தொடங்கியது. ரசிகர்களின் ஆரவாரத்துடன் தொடங்கிய இப்போட்டியில் இங்கிலாந்து – நெதர்லாந்து அணிகள் மோதின.

முதல் கால் பாதி தொடங்கிய சற்று நேரத்தில் நெதர்லாந்து அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார் லேன்ட் யான். நெதர்லாந்து அணியின் அட்டகாசமான டிஃபென்ஸ், இங்கிலாந்து அணியை சிறிது நிலை குலையச் செய்தாலும், ஆட்டத்தின் முதல் பெனால்டி கார்னரை வழங்கியது நெதர்லாந்து அணி.

Hockey Junior WC
Hockey Junior WC

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தன்னுடைய அணிக்காக முதல் கோலை அடித்து ரசிகர்களை ஆர்ப்பரிக்கச் செய்தார் இங்கிலாந்து அணியின் ட்ரேஸி கேடன். நெதர்லாந்து அணி 1, இங்கிலாந்து அணி 1 என்ற கணக்கில் முதல் கால் பாதி முடிந்தது.

இந்நிலையில் இரண்டாம் கால் பாதி தொடங்கிய பின், ஆட்டத்தின் வேகம் குறைந்து கொண்டே வர, சரியாக நான்காவது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் கேப்டன் வீன் காஸ்பர் தன் அணிக்காக இரண்டாவது கோலை அடித்தார்.

பின்பு கோல் அடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இங்கிலாந்து இருந்த நிலையில் அணிக்காக இரண்டாவது கோலை அடித்தார் ரோய்டன் மைக்கேல். இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் விளையாடி 2-2 என்ற கணக்கில் முதல் பாதியை நிறைவு செய்தனர்.

மூன்றாம் கால் பாதி தொடங்கி, சரியாக ஆறாவது நிமிடத்தில் பெனால்டி ஸ்ட்ரோக்கை வழங்கியது இங்கிலாந்து அணி. இதை கனகச்சிதமாகப் பயன்படுத்தி நெதர்லாந்து அணிக்காக மூன்றாவது கோலை அடித்தார் வோல்பர்ட் யோப்பே. மூன்றாவது கால் பாதியின் முடிவில் நெதர்லாந்து 3, இங்கிலாந்து 2 என்ற கணக்கில் இருந்தனர்.

நான்காவது கால் பாதியின் பதினொன்றாம் நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்காக நான்காவது கோலை அடித்தார் லேன்ட் யான். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக அடுத்த அரை நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கான மூன்றாவது கோலை விளாசி ரசிகர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கினார் ஃப்லெச்சர் ஜார்ஜ்.

Hockey Junior WC
Hockey Junior WC
Hockey Junior WC
Hockey Junior WC
Hockey Junior WC
Hockey Junior WC
Hockey Junior WC

இங்கிலாந்து அணி அடுத்த கோலை அடித்துவிடுமோ என்ற அச்சத்தில் விளையாடிய நெதர்லாந்து அணிக்கு, எதிர்பாராத விதமாக பெனால்டி கார்னர் கிடைத்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தன்னுடைய ஐந்தாவது கோலை அடித்து போட்டியில் தங்களின் ஆதிக்கத்தைத் தக்கவைத்து 5-3 என்ற கணக்கில் போட்டியில் வாகை சூடியது நெதர்லாந்து அணி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *