மதுரை: அதிமுக-வில் இணையும் அழகிரி ஆதரவாளர்கள்; அமைச்சர் தொகுதி டார்கெட்டா? – தடதடக்கும் களம்

Spread the love

திமுக-வின் மதுரை முகமாக இருந்தவர்தான் முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரி. 2014 ஆம் ஆண்டு கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் மு.க.அழகிரியையும் அவருடைய ஆதரவாளர்களையும் கட்சியை விட்டு நீக்கினார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

அதன் பிறகு அரசியலில் இருந்தே ஒதுங்கி இருக்கிறார் மு.க.அழகிரி. இவரின் வலது கரமாக இருந்தவரும், முன்னாள் துணை மேயராக இருந்தவருமான பி.எம் மன்னன் மீண்டும் திமுக-வில் இணைவதற்கான வேலைகளை செய்து வந்த நிலையில், திடீரென அதிமுக-வில் இணைந்தார்.

மேலும் மதுரை மத்திய தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேலைகளையும் மன்னன் செய்து வருகிறார் என்ற தகவல், உடன்பிறப்புகளிடையே சலசலப்பை உருவாக்கியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *