மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள எல்.ஐ.சி கிளை அலுவலக 2- வது தளத்தில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அன்று இரவு 8.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது பணியில் இருந்த பெண் முதுநிலை கிளை மேலளரான கல்யாணி நம்பி (55) என்பவர் தீயில் உடல் கருகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் பணியில் இருந்த உதவி நிர்வாக அதிகாரியான ராம் என்பவருக்கு காலில் தீ காயம் ஏற்பட்டு, அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
“போலீஸுக்கு போன் பண்ணு’
இந்த தீ விபத்து ஏற்படுவதற்கு முன் கல்யாணி நம்பி, தனக்கு செல்போனில் அழைத்து பதற்றத்துடன் ‘போலீஸுக்கு போன் பண்ணு’ என கூறிய நிலையில் அழைப்பு துண்டித்தாகவும் அதன் பிறகே இந்த தீ விபத்து நடந்திருக்கிறது, இதனால் தனது தாயாரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கல்யாணி நம்பியின் மகன் லட்சுமி நாரயணன் திலகர்திடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் தீ விபத்தில் காயம்பட்ட ராமை மீட்கும் போது, அலுவலகத்தில் உள்ளே கல்யாண நம்பி இருப்பது குறித்து அவர் தகவல் தெரிவிக்கவில்லை என மீட்பு பணியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரும் தெரிவித்திருந்தார்.