மதுரை கலைஞர் நூற்றாண்டு அரங்கில் 2-வது நாளாக களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி | Jallikattu in Kalaignar Centenary Arena in Keelakarai, Alanganallur

1350538.jpg
Spread the love

Last Updated : 12 Feb, 2025 09:44 AM

Published : 12 Feb 2025 09:44 AM
Last Updated : 12 Feb 2025 09:44 AM

மதுரை: மதுரை அலங்காநல்லூர் பகுதியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரங்கில் 2வது நாளாக இன்றும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் 2 நாள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இரண்டாம் நாளான இன்று (பிப்.12) காலை 7 மணிக்கு போட்டி தொடங்கியது. போட்டியை அமைச்சர் பி மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அமைச்சர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் காளைகள் களமிறக்கப்பட்டன. மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட, கிழக்கு தெற்கு , கிழக்கு வடக்கு மற்றும் வண்டியூர் பகுதிகளை சேர்ந்த 1000 காளைகள், 500 வீரர்கள் இன்று களம் காண்கின்றனர்.

களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும், காளைகளை தழுவும் வீரர்களுக்கும் தங்கக்காசு, சைக்கிள், மிக்ஸி, மெத்தை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

பொது மக்கள் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் கண்டு ரசிக்க பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.எஸ்.பி அரவிந்த் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!


நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *