மதுரை தவெக மாநாடுக்கு இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்க வேண்டும்: காவல் துறை | Madurai Police issues notice to avoid going on two-wheelers to the TVK conference

1373490
Spread the love

மதுரை: மதுரை தவெக மாநாடுக்கு வருபவர்கள் இருசக்கர வாகனத்தில் வருவதை தவிர்க்க வேண்டும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

மதுரை – தூத்துக்குடி சாலையில் பாரபத்தியில் என்ற இடத்தில் தவெக கட்சியின் 2-வது மாநில மாநாடு ஆக.21-ல் நடக்கிறது. இதையொட்டி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அன்றைக்கு போக்குவரத்தில் வழித்தட மாற்றங்களை செய்து மதுரை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

இதன்படி பார்க்கிங் 1-ஐ வந்தடையும் வாகனங்களின் வழித்தடம்: கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக மாநாட்டு திடலை அடையவேண்டும். தூத்துக்குடி, விருதுநகரில் இருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக திடலை அடையவேண்டும். ராமநாதபுரம் மாவட்ட வாகனங்கள் பார்த்திபனூர், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக மாநாடு திடலுக்கு போகவேண்டும்.

தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சிவகங்கை, திருப்புவனம், ஏ.முக்குளம், மீனாட்சிபுரம், ஆவியூர் வழியாக வரவேண்டும்.

பார்க்கிங் 1ஏ-ஐ வந்தடையவேண்டிய வாகன வழித்தடம்: கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் திண்டுக்கல் பாண்டியராஜபுரம், நாகமலைபுதுக்கோட்டை, கப்பலூர் மேம்பாலம், மேலக்கோட்டை, கூடக்கோவில் வழியாக மாநாடு திடலை அடையவேண்டும். தேனி வாகனங்கள் ஆண்டிபட்டி கணவாய், உசிலம்பட்டி, செக்கானூரணி, நாகமலை புதுக்கோட்டை, கப்பலூர் மேம்பாலம், மேலக்கோட்டை, கூடக்கோவில் வழியாக திடலை அடையலாம்.

பார்க்கிங் 2 மற்றும் 3-ஐ வந்தடையும் வாகன வழித்தடம்: சென்னை, விழுப்புரம், வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளுவர், திருவண்ணாமலையில் இருந்து திருச்சி மார்க்கமாக மாநாடுக்கு வரும் வாகனங்கள் விராலிமலை, மேலூர் விரகனூர் ரவுண்டானா, அருப்புக்கோட்டை சந்திப்பு, பாறைபத்தி வழியாக மாநாட்டுத் திடலை சென்றடையலாம்.

கனரக வாகனங்களுக்கான வழித்தடங்கள்: சென்னை மாநகர் , வட மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லவேண்டும். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரியில் இருந்து மதுரை மார்க்கமாக வடமாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் திருமங்கலம், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி வழியாக செல்லவேண்டும்.

சென்னை நகர் மற்றும் வடமாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக சிவகங்கை, ராமநாதபுரம் செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி, கீரனூர், புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக செல்ல வேண்டும். சிகவங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் காரைக்குடி, கீரனூர், புதுக்கோட்டை, திருச்சி வழியாக செல்லவேண்டும்.

விருதுநகர், தூத்துக்குடி , நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் திருமங்கலம், திண்டுக்கல் வழியாக போகவேண்டும்.

மேற்கு மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள் திண்டுக்கல், திருமங்கலம் வழியாக செல்லவேண்டும்.ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் கொட்டாம்பட்டி, நத்தம், திண்டுக்கல் வழியாக போகவேண்டும்.

மேற்கு மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக ராமநாதபுரம், சிவகங்கை செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், நத்தம், கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி வழியாக செல்ல வேண்டும். தேனி மாவட்டத்தில் இருந்து விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி செல்லும் கனரக வாகனங்கள் உசிலம்பட்டி, பேரையூர் வழியாக செல்லவேண்டும்.

விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்கு செல்லும் கனரக வானகங்கள் பேரையூர், உசிலம்பட்டி வழியாக செல்லவேண்டும். தேனி மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை செல்லும வாகனங்கள் பெரியகுளம், திண்டுக்கல், நத்தம், கொட்டாம்பட்டி வழியாக செல்லவேண்டும். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து தேனி செல்லும் கனரக வாகனங்கள் கொட்டாம்பட்டி, நத்தம், திண்டுக்கல், பெரியகுளம் வழியாக செல்லவேண்டும்.

பொதுமக்களுக்கான வாகன வழித்தடம்; தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரிக்கு போகும் வாகனங்கள் ராமநாதபுரம் ரிங்ரோட்டில் இருந்து திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக் கோட்டை வழியாக செல்லவேண்டும்.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக விருதுநகர் , தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள் கப்பலூர் பாலம், திருமங்கலம் கள்ளிக்குடி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக செல்லவேண்டும்.

மாநாட்டுக்கு வரும் கட்சியினர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து இடையூறுகளை தவிர்க்க பொருட்டு குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்கவேண்டும்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் அருப்பக்கோட்டை சந்திப்பில் இருந்து பாரபத்தி வரையிலுள்ள தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து மாற்றுப்பாதைகளில் செல்லுமாறும், மாநாட்டு வரும் வாகனங்கள், கனரக வாகனங்களுக்கென ஏற்பாடு செய்துள்ள மாற்றுப்பாதைகளை பயன்படுத்தவேண்டும் எனவும் மதுரை மாவட்ட காவல் கண்காகணிப்பாளர் அரவிந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *