பலமான வேட்பாளருக்கு எதிராக மக்கள் மத்தியில் பிரபலமான நபர்களை வேட்பாளராக நிறுத்துவது பாஜகவின் பாணி. இதன் மூலம் பிரபலமான நபரை பற்றியே ஊடகங்களும், மக்களும் பேசுவார்கள்அவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பற்றி மக்களிடம் பேச்சு இருக்காது என்பது தான் இதன் பின்னால் உள்ள தேர்தல் யுக்தி.
செல்வாக்கான நபர் என்பதால் புதிதாக மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியிருக்காது, அறியப்பட்ட பிரபலம், திரை கவர்ச்சி ஆகியவற்றால் வாக்குகள் கிடைக்கும் என்பதற்காக இப்படியொரு யுக்தியை வடமாநிலங்களில் பாஜக செய்து வருகிறது. அந்த பாணியை தற்போது மதுரை மத்திய தொகுதியில் செயல்படுத்தியுள்ளனர்.

மதுரை மத்திய தொகுதியின் எம்.எல்.ஏ-வாக அமைச்சர் பி.டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக கூட்டணி கட்சி வேட்பாளரே களமிறங்கினார். இம்முறையும் திமுக சார்பில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனே போட்டியிடுவார் என சொல்லபடுகிறது.