Last Updated:
2025ம் ஆண்டு குடியரசு தினத்தன்று 5 பேருக்கும் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார். காந்தியடிகள் காவலர் விருதுடன் பரிசுத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.40,000 வழங்கப்படும்.
மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக (i) பெ.சின்னகாமணன், காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு விழுப்புரம் மண்டலம், (ii) கி.மகாமார்க்ஸ், தலைமை காவலர்-1989, விழுப்புரம் தாலுகா சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம், (iii) க.கார்த்திக், தலைமை காவலர்-2963, துறையூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, திருச்சி மாவட்டம், (iv) கா.சிவா. இரண்டாம் நிலை காவலர்-1443, ஆயுதப்படை, சேலம் மாவட்டம் மற்றும் (v) ப.பூமாலை, இரண்டாம் நிலை காவலர் 764, ஆயுதப்படை, சேலம் மாவட்டம், ஆகியோருக்கு 2024-ம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.
இவ்விருது முதலமைச்சர் அவர்களால் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள். குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai,Chennai,Tamil Nadu
October 01, 2024 10:44 PM IST
மதுவிலக்கு அமலாக்கப் பணி….சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது!
