இதனால் தண்டவாளத்தில் கிடந்த டூவீலர் மீது மோதிய ரயில் எஞ்சின், அதை சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், ரயிலின் குறுக்கே டூவீலரை போட்டுவிட்டு தப்பிய நபர் குறித்து ராமேஸ்வரம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர்.
ரயில் மோதியதில் டூவீலரின் நம்பர் பிளேட் நொறுங்கியதால், அதன் மூலம் டூவீலரின் உரிமையாளரை கண்டறிய முடியவில்லை.

இதையடுத்து, போலீஸார் டூவீலரின் எஞ்சின் எண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில், டூவீலரை ஓட்டி வந்தவர் உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பதும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீஸார் நடத்திய விசாரணையில், மதுக்கடை அடைக்கும் நேரம் நெருங்கிவிட்டதால் மது வாங்க தண்டவாளம் வழியாக வேகமாக செல்ல முயன்றதாக கலைச்செல்வன் கூறியுள்ளார்.
பின்னர், கலைச்செல்வன் ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.