தொடர்ந்து அந்தப் பகுதியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலை செய்யப்பட்டது இடையஞ்சாவடியைச் சேர்ந்த வினோத் என்பதும், கொலை செய்தது ஆலங்குப்பம் துருவை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், சஞ்ஜெய், ஹரி மற்றும் ஜானகிராமன் என்பது தெரியவந்தது.
அதேசமயம் ஹரி தப்பிவிட, மற்ற மூவரையும் கைது செய்திருக்கின்றனர் போலீஸார். இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய கோரிமேடு காவல் நிலைய விசாரணை அதிகாரிகள், “கார்த்திகேயன், சஞ்ஜெய், ஹரி, ஜானகிராமன் நான்கு பேரும் தமிழகப் பகுதியான துருவை கிராமத்தைச் சேர்ந்த ரௌடிகள்.

சம்பவம் நடந்த அன்று சரக்கடித்த போதையில் இருந்த அந்த நான்கு பேருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது மதுக்கடைக்கு வந்த வினோத், `நீங்க எல்லாரும் ஃபிரண்ட்ஸ்தானே… அப்புறம் ஏன் உங்களுக்குள் சண்டை போட்டுக்கறீங்க…’ என்று கேட்டுவிட்டு மதுக்கடைக்குள் சென்றார்.
அதில் கோபமடைந்த அந்த நான்கு பேரும் வினோத்தை பின்தொடர்ந்து வந்து, `நாங்க சண்டை போட்டுக்கிட்டா உனக்கென்ன ?’ என்று கேட்டு சரமாரியாக அடித்திருக்கிறார்கள்.
அதில் கீழே விழுந்த வினோத்தின் கழுத்திலேயே கார்த்திகேயன் மூர்க்கமாக தாக்கினான். அதில்தான் வினோத் உயிரிழந்துவிட்டார். தலைமறைவாக இருக்கும் ஹரியை தேடி வருகிறோம்” என்றனர்.