மது விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை: அமைச்சர் முத்துசாமி உறுதி | Minister Muthusamy confirms no action taken to increase liquor sales

1380703
Spread the love

ஈரோடு: மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்வை துறை அமைச்​சர் முத்​து​சாமி ஈரோட்​டில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் மது விற்​பனையை அதி​கரிக்க அரசு எந்த கூடு​தல் நடவடிக்​கை​யும் மேற்​கொள்​ள​வில்​லை. ஆண்​டு​தோறும் மது விற்​பனை அதி​கரிப்​பது வழக்​க​மான ஒன்​று. இதற்​காக அரசு தனி முயற்சி எடுப்​ப​தில்​லை. மாறாக, மதுக் கடைகளை படிப்​படி​யாக மூடும் நடவடிக்​கை​யில் அரசு ஈடு​பட்​டுள்​ளது.

மது பாட்​டிலுக்​காக வாங்​கப்​படும் ரூ.10 அரசின் வங்​கிக் கணக்​கில் நேரடி​யாக செலுத்​தப்​படு​கிறது. அந்​தப் பணத்தை தவறாகப் பயன்​படுத்த முடி​யாது. நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தான் மது பாட்​டில்​களுக்கு வைப்​புத்​தொகை பெறப்​படு​கிறது. ஆனால், கூடு​தலாக 10 ரூபாய் பெறப்​படு​வ​தாக தவறாக சித்​தரிக்​கப்​படு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *