மத்தியப் பிரதேசம்: கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 சடலங்கள் கண்டெடுப்பு

Dinamani2f2025 01 042fpxisps6z2fmp.jpg
Spread the love

மத்தியப் பிரதேசத்தில் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் சிங்கரௌலி மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றின் கழிவுநீர் தொட்டியில் இருந்து சனிக்கிழமை மாலை நான்கு சடலங்கள் மீட்கப்பட்டன. கழிவுநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உள்ளூர்வாசி ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தொட்டியில் நான்கு சடலங்களை கண்டெடுத்தது.

பலியானவர்களின் ஒருவர் வீட்டு உரிமையாளர் ஹரி பிரசாத் பிரஜாபதியின் மகன் சுரேஷ் பிரஜாபதி (30), மற்றொருவர் கரண் ஹல்வாய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்ற இரண்டு உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

மின்சார ரயில்கள் ரத்து: நாளை(ஜன.5) கூடுதல் பேருந்துகள் இயக்கம்

முதற்கட்ட விசாரணையின்படி, சுரேஷ் மற்றும் கரண் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் ஒரு விருந்துக்கு ஜனவரி 1 ஆம் தேதி வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.

பின்னர் அவர்கள் வளாகத்தில் கொல்லப்பட்டு சடலங்கள் தொட்டியில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது என்று காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிங்கரௌலி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *