இந்த வரையறைகள் கூறும் முக்கிய விஷயங்கள்…
> இனி எந்தத் துறை, எந்த வேலைகளாக இருந்தாலும் அப்பாயின்ட்மென்ட் லெட்டர் என்பது மிக மிக அவசியம்.
அந்த லெட்டரில் என்ன வேலை என்பது முதல் சம்பளம் வரை அனைத்தும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
இதன் மூலம், சம்பளம் ஒன்று கூறுவது… ஆனால், தருவது ஒன்று போன குளறுபடிகளை தடுக்க முடியும்.
> கிக் தொழிலாளர்கள், டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் என அனைவருக்கும் சமூக பாதுகாப்பு தந்திருக்க வேண்டும்.
> ஒரு நாளுக்கு 8 – 12 மணிநேரத்திற்குள் தான் வேலை நேரம் இருக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு 48 மணிநேரத்திற்கு மேல் பணியாளர்களிடம் இருந்து வேலை வாங்கக்கூடாது.
> ஓவர் டைம்களுக்கு சராசரி சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிக சம்பளம் தர வேண்டும்.
> கான்ட்ராக்ட் பணியாளர்களுக்கும் நிரந்தர பணியாளர்களுக்குக் கிடைக்கும் அனைத்து பலன்களும் கிடைக்க வேண்டும்.

> நிரந்தர பணியாளர்கள், கான்ட்ராக்ட் பணியாளர்கள் – இருவருக்கும் கிடைக்கும் சம்பளம் ஒரே அளவில் தான் இருக்க வேண்டும்.
> இனி கிராஜுவிட்டி தொகையை ஓராண்டிற்கு அந்த நிறுவனத்தில் வேலை செய்திருந்தாலே கொடுக்கலாம். முன்பு இதன் அளவு ஐந்து ஆண்டுகளாக இருந்தது.
> எந்தத் துறையாக இருந்தாலும், 20 மற்றும் அதற்கு மேல் பணியாளர்கள் இருந்தாலே, இ.பி.எஃப்.ஓ திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
> இனி ஆண்டுதோறும் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு ஹெல்த் செக்-அப் செய்ய வேண்டும்.
> குறிப்பிட்ட தேதிகளில் பணியாளர்களுக்கு சம்பளம் சென்றுவிட வேண்டும்.
> பெண்களுக்கு விருப்பமிருந்தால், அவர்கள் நைட் ஷிப்டுகளில் பணிபுரியலாம். ஆனால், அந்த நிறுவனத்தில் பாதுகாப்பிற்கு தேவையான அம்சங்கள் கட்டாயமிருக்க வேண்டும்.