மத்திய அரசு அறிவிப்புக்கு காங். கடும் எதிர்ப்பு!

Dinamani2f2024 052f99981fc8 060a 4852 Bf49 4e387f6fe0592fmalligarjun Karge081558.jpg
Spread the love

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை கண்டித்து, ஆண்டுதோறும் ஜூன் மாதம் 25-ஆம் தேதி `சம்விதான் ஹாத்யா திவாஸ்’ என்ற பெயரில் அரசியலமைப்பு படுகொலை நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது மத்திய அரசு.

அரசின் இந்த அறிவிப்பை கடுமையாக எதிர்த்துள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ், கண்டனத்தை பதிவிட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் பாஜக அரசு அரசமைப்பு படுகொலை நாளை அனுசரித்து வருகிறது.

பாஜக – ஆர்எஸ்எஸ் இவ்விரண்டும் அரசமைப்பை நீக்கிவிட்டு மனுஸ்மிருதி முறையை அமல்படுத்த விரும்புகின்றன. இதன்மூலம், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன.

புனிதத்துவமான அரசமைப்பு என்ற சொல்லுடன் படுகொலை என்ற வார்த்தையை இணைத்துள்ளதன் மூலம், அம்பேத்கரை அவமதிக்கின்றன பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் எனப் பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *