மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு

Dinamani2f2024 09 142f82n9afm32fthangam Thenarasu.jpg
Spread the love

மத்திய துறை திட்டமாக அங்கீகரிக்க வேண்டும்

மத்திய நிதி அமைச்சரை நாங்கள் கேட்டுக் கொள்வதெல்லாம் மத்திய அரசின் பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்தபடி சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் வழித்தட திட்டத்தினை, மத்திய துறை திட்டமாக அங்கீகரித்து மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடியினை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதேயாகும்.

ஒரு ரூபாய் கூட இதுவரை விடுவிக்கப்படவில்லை

மேலும் மத்திய நிதி அமைச்சர் ரூ.21,000 கோடி வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் கடன்களாக ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ள போதிலும் தமிழ்நாடு அரசு ரூ.5,880 கோடி மட்டுமே செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். உண்மையில் இதுவரை இந்த திட்டத்திற்காக ரூ.18,564 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு இதுவரை தனது சொந்த நிதியிலிருந்து செலவிட்டுள்ள தொகை ரூ.11,762 கோடியாகும். வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் மூலமாக மேற்கொள்ளப்பட்ட செலவு ரூ.6,802 கோடியாகும். ஆனால் மத்திய அரசின் பங்கான பொது முதலீட்டுக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடியில் ஒரு ரூபாய் கூட மத்திய அரசால் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

வஞ்சிக்கப்படுகிறது தமிழ்நாடு

தமிழ்நாடு எவ்வாறு வஞ்சிக்கப்படுகிறது என்பதை இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது மத்திய நிதி அமைச்சர் நாட்டில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து பேசும்போது கொச்சி, சென்னை, பெங்களூரூ, நாக்பூர் மற்றும் நாசிக் ஆகிய 5 நகரங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

சென்னைக்கு எந்தவித நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை

இந்த அறிவிப்புக்கு பின்பு பெங்களுருவுக்கு ரூ. 30,399 கோடி, கொச்சி நகரத்திற்கு ரூ.1957 கோடி, நாக்பூர் நகரத்திற்கு ரூ.6708 கோடி, பூணே நகரத்திற்கு ரூ. 910 கோடி, தாணே நகரத்திற்கு ரூ. 12,200 கோடி மதிப்பீடு கொண்ட திட்டங்களுக்கு மத்திய அரசு மத்திய துறை திட்டம் அடிப்படையிலேயே ஒப்புதல் வழங்கி உள்ளது. ஆனால் இதுவரை சென்னைக்கு எந்தவித நிதி ஒதுக்கீடும் மத்திய அரசு செய்யவில்லை.

மேலும், 2024-25 ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் மகாராஷ்டிரம், புதுதில்லி, குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கெல்லாம் உரிய நிதி மற்றும் சார்நிலைக்கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் இந்த நிதி ஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தமிழ்நாடு மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுவது ஏன்?

நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு ஏன் மேற்குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை? தமிழ்நாடு ஏன் மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுகிறது? அரசியல் காரணங்களுக்காக பொது மக்கள் பாதிக்கப்படும் வகையில் திட்டங்களை தொய்வுப்படுத்தவும், மாநில அரசிற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தவும் இவ்வாறு செய்யப்படுகிறதோ என்று நமக்கு ஐயம் ஏற்படுகிறது.

ரூ.7,425 கோடியை மத்திய அரசு வழங்கிட வேண்டும்

எனவே, இந்த ஐயத்தை எல்லாம் போக்கும் வண்ணம் தமிழ்நாடு அரசின் நியாயமான கோரிக்கைளை ஏற்றும் இந்த திட்டத்தினை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருவதை கருத்தில் கொண்டும் ஏற்கனவே பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளபடி தனது பங்கான ரூ.7,425 கோடியை மத்திய அரசு வழங்கிட வேண்டுமென்றும், இந்த திட்டத்தை மத்திய துறை திட்டமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு அரசின் கடன் சுமையைக் குறைத்திட வழிவகை செய்திடவும், மத்திய நிதி அமைச்சரை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *