சீனாவில் புதிதாக பரவிவரும் எச்எம்பிவி தொற்று மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவில் மக்களை அச்சுறுத்தி வரும் எச்.எம்.பி.வி. அல்லது மெடாநியுமோ வைரஸ் காய்ச்சலால் கடந்த சில நாள்களாக அங்குள்ளோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடகத்தின் பெங்களூருவில் இரண்டு பேருக்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நடவடிக்கை கோரி கேஜரிவால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கரோனா தொற்று பாதிப்பு நாட்டையே உலுக்கியது. எனவே எச்.எம்.பி.வி. வைரஸ் பாதிப்பை முன்கூட்டியே கட்டுப்படுத்துவது அவசியம். அதேசமயம் நிலைமையை எதிர்கொள்ள சுகாதாரத் துறை தயாராக இருக்க வேண்டும்.