இந்திய இறக்குமதி பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் உத்தரவு நியாயமற்றது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் வரி உயர்வு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப நாள்களாக ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா குறிவைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தனது தேச நலன்களை பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், சந்தை காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவின் இறக்குமதி உள்ளதாக ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.