டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (ஜன.14) தமிழர் திருநாளான பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருக்கிறார்.

“ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற நோக்கத்துடன் நடைபெறும் இந்த விழாவில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக தலைவர்களும், பல்வேறு மாநிலங்களின் முக்கிய பிரதிநிதிகளும், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக ஜி.வி பிரகாஷ், சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட ‘பராசக்தி’ படக்குழுவினர் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கின்றனர். பிரதமர் மோடி உரையாற்றும் இந்த நிகழ்வில் சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் போன்ற தமிழர்களின் வீர விளையாட்டுகளும், பாரம்பரிய உணவுகளும் இந்த விழாவில் இடம்பெறுகின்றன.
மேலும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.