போர் நீடித்தால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படும் என்பதையும், தனது Belt and Road முதலீடுகள் சிதையும் என்பதையும் உணர்ந்த சீனா, ஈரான் மீதுள்ள தனது பொருளாதார செல்வாக்கைப் பயன்படுத்தியது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பாகிஸ்தானுடன் இணைந்து 5 அம்ச அமைதித் திட்டத்தை உருவாக்கினார். சீனாவின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டியதுடன், அதிபர் ஜின்பிங்கிற்குத் தனது மரியாதையைத் தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள பாகிஸ்தான், இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பொருத்தமான “நடுநிலை இடமாக’ மாறியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரின் ஒத்துழைப்போடு, இஸ்லாமாபாத் இந்தத் தூதரகப் பேச்சுவார்த்தையை ஒருங்கிணைத்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கத் தரப்பில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது. ஈரான் தரப்பில் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கலந்து கொள்கிறார்.