மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவினர் முறைகேடு செய்து, அச்சுறுத்தி பணம் வசூல் செய்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு சமீபத்தில் எழுந்தது. இதனையடுத்து, தேர்தல் பத்திரம் நடைமுறைப்படுத்த மத்திய நிதி அமைச்சகம் தான் முக்கிய காரணம். தேர்தல் பத்திர நடைமுறையை கொண்டு வந்தது மத்திய நிதி அமைச்சகம் தான்.
இதனால் தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் எனும் ஜேஎஸ்பி அமைப்பு சார்பில் பெங்களூருவில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.